வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 28 ஜூலை, 2010

ஊர்காவற்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

ஊர்காவற்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இப்பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமாகிய சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் தலைமையில் ஊர்காவற்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) நடைபெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

பிரதேச செயலாளர் திரு கே. சிறீமோகன் தனது வரவேற்புரையில் இப்பகுதியில் கடந்த காலங்களில் பணியாற்றிய உதயன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டது மாத்திரமன்றி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவராக நியமிக்கப்பட்டமை இப்பிரதேச அபிவிருத்திக்கு ஒரு அரிய சந்தர்ப்பமாகும் எனக் குறிப்பிட்டார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் தலைமையுரையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினதும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினதும் ஆலோசனைக்கமைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் யாழ் மாவட்டத்திலுள்ள 14 பிரதேச செயலர் பிரிவுகளில் 10 பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு தான் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பாரிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மக்கள் தமது உயிருக்கு அஞ்சி வாழ்ந்த காலம் மாறி சகலரும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நாம் மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஒரு நல்ல சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. நாம் எமக்கு மத்தியில் உள்ள சிறு குறைகளைத் தீர்த்து ஒரு தொலைநோக்குடன் செயற்பட வேண்டும். இந்த அபிவிருத்தி பாதையில் பங்காற்றிய அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

தற்போது இப்பிரதேச செயலர் பிரிவில் 300 குடும்பங்களுக்கு நேர்ப் வீட்டுத்திட்டமும் இந்திய அரசின் உதவித் திட்டத்தில் 35 வீடுகளும் ஐ.ஓ.எம் நிறுவனத்தினால் 100 வீடுகளும் அமைக்கப்படுவது மீளக்குடியமர்ந்த மக்களுக்கு ஒரு ஆறுதலாக அமையும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது புளியங்கூடல் விவசாய சங்கத்திற்கு ஜக்கா நிறுவனத்தின் அனுசரனையுடன் சேவாலங்கா நிறுவனத்தால் வழங்கப்பட்ட இரண்டு சக்கர உழவு இயந்திரத்தையும் சொண்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட நீர் இiறைக்கும் இயந்திரங்கள் தெளிகருவிகள் தையல் இயந்திரம் மற்றும் டீசல் மோட்டார் இயந்திரத்தையும் வழங்கி வைத்தார்.

அத்துடன் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஊர்காவற்துறை பிரதேச பாடசாலைகளில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்ததுடன் செயலக வளாகத்தில் மரங்கன்று ஒன்றையும் நாட்டி வைத்தார்.

இக்கலந்துரையாடலில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் திணைக்கள தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’