தேசிய வடிவமைப்புச் சபை எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை இன்று நடாத்தியுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
தேசிய வடிவமைப்புச் சபையின் கேட்போர் கூடத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன் போது பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்டுவரும் தேசிய வடிவமைப்புச் சபையூடாக எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சின் கீழான சகல சபைகளும் நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாகவே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பையும் மக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.
கலந்துரையாடலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் அமைச்சின் செயலாளர் ஆலோசகர் மற்றும் தேசிய வடிவமைப்புச் சபைத் தலைவர் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’