வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 11 ஜூலை, 2010

காரைநகர் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலி


யாழ்பாணம் -காரைநகர் வீதியில் இடம்பெற்ற பஸ் முச்சக்கர வண்டி விபத்தில் வயோதிப் பெண் ஒருவர் பலியானார்கள், மேலும் இருவர் படுகாயமடைந்தும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையில் யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர் சென்றுகொண்டிருந்த இ.போ.ச பஸ் காரைநகரில் இருந்து குடும்பமாக வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியது.
இச்சம்பவத்தில் ஆட்டோவில் பயணித்த காலைநகரைச் சேர்ந்த பா.நாகம்பாள் (வயது – 66) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிhழந்தார். முச்சகர வண்டி ஓட்டி வந்த பா.மனோகரன் அவர் மகள் ம.மதுசா (வயது – 5) ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிறுமி மதுசா இன்னமும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மது போதையில் வந்த இ.போ.ச போக்குவரத்துச் சபையின் பஸ் சாரதியின் கவனக் குறைவினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து நடந்த சமயம் பஸ் சாரதி தப்பியோடி விட்டார்.
முதல் கட்ட விசாரணைகளை மேற்கொண்ட மானிப்பாய் பொலிஸார் தப்பியோடிய சாரதியை கைது செய்து, மேலும் விசாரணைகளுக்காக வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’