வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 11 ஜூலை, 2010

ஆக்டோபஸ் கணிப்பு வெற்றி. உலக கோப்பை கால்பந்து: ஜெர்மெனிக்கு 3-ம் இடம்

உலக கோப்பை கால்பந்தின் 3வது இடத்துக்கான போட்டியில், உருகுவேயை 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது ஜெர்மெனி அணி.

அரையிறுதி போட்டியில் தோல்வியுற்ற ஜெர்மனி, உருகுவே அணிகள் மோதின. போர்ட்எலிசபெத்தில் நேற்று நள்ளிரவில் நடைபெற்ற இந்தப் போட்டி, ரசிகர்களுக்கு த்ரில்லர் அனுபவத்தைத் தந்தது.
ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் ஜெர்மெனியின் முல்லர் ஒரு கோலைத் திணித்தார். அதற்கு பதிலடி தரும் வகையில், 28வது நிமிடத்தில் உருகுவே வீரர் காவினி அற்புதமான கோலை திணித்தார். இதனால் ஆட்டம் 1-1 என்ற சமநிலை பெற்றது.
அதன்பின் விறுவிறுப்பு கூட, 51வது நிமிடத்தில் உருகுவே வீரர் ஃபோர்லன் அடித்த கோலால் ஜெர்மெனி அதிர்ந்தது.
அந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் வகையில், 56வது நிமிடத்திலேயே ஜான்சன் ஒரு கோல் திணிக்க, ஜெர்மெனி 2-2 என்ற சமநிலை பெற்றது.
அதைத் தொடர்ந்து, ஆட்டம் முடியும் தருவாயில் 82வது நிமிடத்தில் ஜெர்மெனியின் கேதிரா ஒரு கோலை திணித்து முன்னிலைக்கு வித்திட்டார்.
தொடர்ந்து தடுப்பாட்டம் மேற்கொண்டதால், ஆட்ட நேர முடிவில் ஜெர்மெனி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்தைப் பெற்றது.

ஆக்டோபஸ் கணிப்பு வெற்றி..

3வது இடத்துக்கான போட்டியில் ஜெர்மெனி வெற்றி பெறும் என்று ஆக்டோபஸ் கணித்தது மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறது.
இதுவரை ஜெர்மெனி ஆடிய ஏழு போட்டிகளிலும் சரியாக கணித்த ஆக்டோபஸ், இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் வென்று ஸ்பெயின் சாம்பியன் ஆகும் என கணித்திருக்கிறது. இதனால், ஸ்பெயின் ரசிகர்கள் ஆக்டோபஸை மிகவும் நம்புகின்றனர்.

இறுதிப் போட்டி...

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜோகனஸ்பர்க் சாக்கர்சிட்டி மைதானத்தில் நடக்கிறது. இதில், ஸ்பெயின்- நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இரு அணிகளுமே முதல் முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளன. ஐரோப்பிய கோப்பையை 2 முறை வென்ற (1964, 2001) ஸ்பெயின் அணியில் ஷவி ஹொனாண்டஸ் டொரஸ், பெட்ரோ, இனெஸ்டா, ஷபி அலோன்சா செர்ஜியோ ரமோஸ் போன்ற உலகின் சிறந்த வீரர்கள் உள்ளனர். கேப்டனும், கோல் கீப்பருமான இகேர் கேசிலாஸ் அந்த அணியின் முதுகெலும்பாக உள்ளார்.
1988-ம் ஆண்டு ஐரோப்பிய கோப்பையை வென்ற நெதர்லாந்து அணியில் ரோபன், டிர்க்கிïட், ராபின் வான்பெர்சி, கேப்டன் ஜிலோனி வானபிரோன் ஹோஸ்ட், மார்க் வான பொம்மல் போன்ற சிறந்த வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’