இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் நாம் இணைந்துக் கொண்ட விடயம் முடிவான விடயம் இதில் எவ்விதமான மாற்றமும் இல்லை என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் மற்றும் அம்பகமுவ பிரதேசசபை உறுப்பினர் எஸ்.சிவசுந்தரம் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
நாம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமைத்துவத்தினை ஏற்றுக்கொண்டு செயற்படத் தொடங்கி விட்டதால் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியுடன் இரகசியமாகவோ வெளிப்படையாகவோ எவ்விதமான பேச்சுவார்த்தையையும் நடத்த வேண்டிய தேவையில்லை.
நுவரெலியா மாநகர சபை உறுப்பினர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவலாகும். மக்கள் மத்தியில் எமது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் எடுக்கப்படும் முயற்சிகளை நாம் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்துக் கொண்டதை ஆயிரக்கணக்கான எமது ஆதரவாளர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவிக்கின்றனர். இது எமக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிர்வாக கட்டமைப்பு மற்றும் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் நாம் நன்கு அறிந்தவர்கள் என்பதால் தேவைக்கேற்ற தேசிய சபையை உருவாக்குவதும் தேவையற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதும் வாடிக்கையாக வந்த விடயங்களே.
இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அறிக்கை வெளியிடுபவர்கள் எம்மை அவமானப்படுத்துவதாக கருதி தம்மை அவமானப்படுத்திக் கொள்ளவேண்டாம் என கேட்டுக் கொள்கின்றோம்.
என இந்த அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’