வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 26 ஜூலை, 2010

தாலிபான்களுக்கு தீவிர ஆதரவாக பாகிஸ்தான் செயற்பட்டதாக குற்றச்சாட்டு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு தீவர ஆதரவாக பாகிஸ்தானின் உளவுப்படை செயற்பட்டது என்று அமெரிக்க இராணுவம் குறித்து கசிந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் கடுமையாக நிராகரித்துள்ளது.
கசிந்த இந்த ஆவணங்களில் இருக்கும் தகவல்கள் ஆதாரமற்றவை என்று பாகிஸ்தானிய அதிபர் அலுவலகம் வர்ணித்துள்ளது.
அமெரிக்க இராணுவம் குறித்த இந்த ஆவணங்கள் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பிரசுரமாகியுள்ளன. அதில் நேட்டோ, ஐக்கிய நாடுகள் மற்றும் இந்திய இலக்குகள் தாலிபான்கள் குறிப்பாக தாக்குதல்களை நடத்த பாகிஸ்தானின் உளவுப் பிரிவு உதவியது என்று குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகளை குலைக்கும் ஒரு சதியாக இந்த ஆவணக் கசிவுகள் இருக்கலாம் என பாகிஸ்தானின் அதிபரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதே போல அமெரிக்காவும் இந்த ஆவணக் கசிவை கண்டித்துள்ளது. இது நேட்டோ படையினர் மற்றும் ஆப்கானிய பாதுகாப்பு படையினரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ளது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆனால், இந்தக் கசிவுகள் ஆப்கானிஸ்தான் தொடர்பான சர்வதேச முயற்சிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தும் என்று தான் கருதவில்லை என்று பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக் கூறியுள்ளார்.
விக்கி லீக்ஸ் எனப்படும் இணையதளத்தில் அமெரிக்க இராணுவம் குறித்த இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆவணக் கசிவில் நேட்டோ படையினரால் ஆப்கான் சிவிலியன்கள் கொல்லப்படுவது உட்பட பல்வேறு தகவல்கள் இருக்கின்றன.
போர் குற்றங்கள் இழைக்கப்பட்டிருப்பதற்கான சாட்சிகள் இந்தத் தகவல்கள் மூலம் வெளி வந்திருக்கால் போலத் தோன்றுகிறது என இந்த இணைய தளத்தை உருவாக்கியுள ஜூலியன் அசாங்கே கூறியுள்ளார்.
எனினும் இது குறித்த முடிவுகளை நீதிமன்றம் தான் எடுக்க முடியும் எனவும் ஜூலியன் அசாங்கே தெரிவித்துள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’