வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 6 ஜூலை, 2010

பதவிக்காலத்தை நிறைவுசெய்த சுவிஸ் தூதுவர் ஜனாதிபதியிடம் விடைபெற்றார்.

இலங்கைக்கான சுவிற்சலாந்து தூதுவராக பணிபுரிந்த ரூத் பிளின்ட் அம்மையார் தனது சேவைக்காலத்தை பூர்த்தி செய்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் விடைபெற்றார்.



இன்றையதினம் (05) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அழைப்பின்பேரில் அலரி மாளிகை சென்ற ரூத் பிளின்ட் அம்மையார் மரியாதையின் நிமித்தமான சந்திப்பினை மேற்கொண்டார். இலங்கையில் தாம் சேவையாற்றிய காலப்பகுதி மிகவும் மகிழ்ச்சிக்குரிய காலம் எனத்தெரிவித்த அவர் திருப்திகரமாக தனது சேவையினை நிறைவுசெய்த நிலையில் நாடு திரும்புவதாக தெரிவித்ததுடன் இலங்கை அரசாங்கமும் மக்களும் தனக்கு வழங்கிய ஒத்துழைப்பிற்கு ஜனாதிபதிக்கு மனப்பூர்வமான நன்றியினையும் தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’