வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 24 ஜூலை, 2010

மக்களின் நலன் கருதி அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டும்: ஆறுமுகன்

நுவரெலியா மாவட்டத்தில் வாழுகின்ற மலையக மக்களையும் உள்வாங்கி;க்கொண்டு மக்களுக்குச் சிறந்த வகையில் சேவையாற்றும் வகையில் அரச நிறுவனங்கள் செயற்பட வேண்டும் என்று இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் கால்நடை ,கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இன்று நுவரெலியா மாவட்டச்செயலகத்தில் இடம் பெற்ற போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், மலையகத்தில் வாழும் மக்களின் நலன் கருதி அரச நிறுவனங்கள் செயற்படு வேண்டும். கடந்த காலங்களில் நுவரெலியா மாவட்டத்தில் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டங்களில் மலையக இளைஞர் யுவதிகள் உரிய வகையில் உள்வாங்கப்படாமையானது கவலைத்தரக்கூடிய விடயமாகும். எனவே எதிர்காலத்தில் இம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித்திட்டங்களில் மலையக இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்பட வேண்டும்.
அரச பணிகளைத் மலையக மக்களிடத்திலும் கொண்டு செல்வதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கபட வேண்டும். இரண்டு மாதத்துக்கொரு முறை கூட்டப்படுகின்ற இந்த மாட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டத்திற்கு அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் கட்டாயம் சமுகமளித்திருக்க வேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் மக்களின் பிரச்சினைகள் உடனுக்குடன் நிறைவேற்றும் வகையில் எதிர்வரும் கூட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவித்தார்.
இக் குழுக்கூட்டத்தில் இ.தொ.கா.வின் தலைவரும் பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான முத்துசிவலிங்கம் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான நவின்திசாநாயக்க,வி.இராதாகிருஷ்ணன், இராஜதுரை ,ஜெ.ஸ்ரீரங்கா ஆகியோரும் அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’