வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 24 ஜூலை, 2010

பண்டாரநாயக்க குடும்பத்துக்கு எதிரான கொள்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது: முன்னாள் ஜனாதிபதி



பண்டாரநாயக்க குடும்பத்துக்கு எதிரான கொள்கைகளை அரசாங்கம் கொண்டிருக்கிறது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பி.பி.சி. சிங்கள சேவைக்கு தெரிவித்துள்ளார்.

தனது தாயான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, உலகின் முதல் பெண் பிரதமராக தெரிவு செய்யப்பட்டு ஐம்பது வருட பூர்த்தி கடந்த 21ஆம் திகதி நிறைவடைந்தது. அந்நிகழ்வைக் கொண்டாட அரசு தவறி விட்டது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குற்றஞ்சுமத்தியுள்ளார்.
"பண்டாரநாயக்க குடும்பத்திற்கு எதிரான கொள்கையை அரசாங்கம் கொண்டிருக்கிறது. சாதாரண மக்களைத் தவிர ஸ்ரீமாவோவை எவரும் நினைவுகூரவில்லை. அவரின் சாதனைகளை நினைவுகூருவதற்கு அரசாங்கமோ அவரின் கட்சியோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அணிசேரா நாடுகள் ஒன்றியத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக விங்கியவர் . பல சர்வதேச பேச்சுவார்த்தைகளிலும் தலைமை தாங்கியுள்ளார்" எனவும் சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார்.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’