இளம் சமுதாயத்தினர் கல்வி விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்கி எதிர்கால சமூகத்திற்கு முன்னுதாரணமாக திகழ வேண்டுமென பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தலைவர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றைய தினம் அராலி தெற்கு களவத்துறை விளையாட்டுக் கழகத்தின் இவ்வாண்டுக்கான ஆடி விழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இளம் சமுதாயத்தினரின் முழுமையான ஆளுமை விருத்திக்கு கல்வி விளையாட்டு கலை இலக்கியம் போன்ற துறைகள் முக்கியமானவை உடல் உள வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருப்பதனால் தான் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளை நாம் ஊக்குவித்து வருகின்றோம்.
எனவே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தி இளம் சமுதாயத்தினர் கல்வி விளையாட்டு இலக்கியம் போன்ற துறைகளில் சிறப்பாகச் செயற்பட வேண்டுமென்பதுடன் சமூகத்திற்கு முன்னுதாரணமாகவும் விளங்க வேண்டுமென்பதே எமது நோக்கமாகுமென்றும் சந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.
அராலி தெற்கு களவத்துறை விளையாட்டுக்கழக மைதானத்தில் குகராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மென்பந்து துடுப்பாட்டத்தில் வெற்றி பெற்ற ஆணைக்கோட்டை லெவன் ஸ்ரார் விளையாட்டுக் கழகத்திற்கு சந்திரகுமார் அவர்கள் வெற்றிக் கேடயத்தை வழங்கி வைத்தார். அத்துடன் ஏனைய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி.யின். வலிகாம இணைப்பாளர் ஜீவன் உட்பட பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’