செல்லிடத் தொலைபேசிகளில் வெளிச்செல்லும் அழைப்புகளுக்கு ஆகக் குறைந்த கட்டணமாக நிமிடத்திற்கு இரண்டு ரூபா அறவிடப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பார்த்தி எயார்டெல் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது.
செல்லிடத் தொலைபேசித்துறையினர் எதிர்கொள்ளும் நஷ்டத்தைக் கருத்திற்கொண்டு, வெளிச்செல்லும் அழைப்புகளுக்கு ஆகக் குறைந்த கட்டணமாக இரண்டு ரூபா அறவிடப்பட வேண்டும் இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வியாழனன்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1989 ஆம் ஆண்டு செல்லிடத் தொலைபேசிகள் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இத்துறையினர் முதல் தடவையாக கடந்த வருடம்; 2300 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறெனினும், இலங்கையில் செயற்படும் செல்லிடத் தெலைபேசி சேவை நிறுவனங்களில் ஒன்றான பார்த்தி எயார்டெல் இத்தீர்மானத்தை எதிர்ப்பதாக அந்நிறுவனத்தின் வணித்துறை தொடர்பான பிரதம அதிகாரி யொஹான் முனவீர இன்று ஏ.எவ்.பி. செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
ஆகக்குறைந்த கட்டணம் என்பது பாவனையாளர்களின் நலன்களுக்கு எதிரானது என அவர் கூறியுள்ளார். மேற்படி சந்தையில் முன்னிலையிலுள்ள நிறுவனத்திற்கு மாத்திரமே நன்மையளிக்கும் என பார்த்தி எயார்டெல் சமர்ப்பித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’