வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஜூலை, 2010

வல்லை நெசவாலையினை மீண்டும் இயங்கவைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை

வடபகுதியில் இயங்கிய புகழ்பெற்ற நெசவாலைகளுள் ஒன்றான வல்லை நெசவாலையினை மீண்டும் இயங்கவைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

1959ம் ஆண்டு ஆரம்பித்து சிறப்பாக இயங்கிய வல்லை நெசவாலையானது வடபகுதியில் ஏற்பட்ட ஆயுத மோதல்கள் காரணமாக 85ம் ஆண்டுக் காலப்பகுதியில் முற்றாக அழிவடைந்து தனது செயற்பாட்டினை இழந்தது. இந்நிலையில் தற்சமயம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதவியேற்றுள்ள நிலையில் பலதரப்பினராலும் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து இவ்விடயத்தில் கூடிய அக்கறை செலுத்திய அமைச்சரவர்கள் மீண்டும் வல்லை நெசவாலையினை இயங்கவைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இன்றையதினம் வல்லை நெசவாலையின் தலைவராக விளங்கிய சி.சண்முகராசா உப தலைவர் பா.கிருஷ்ணகுமார் ஆகியோருடன் விரிவாக கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீண்டும் நெசவாலையினை ஆரம்பிப்பதற்குரிய ஏதுநிலையினை கண்டறிந்ததுடன் ஆரம்ப முதலீட்டுத் தொகையாக ரூபா ஒரு லட்சத்தினை அன்பளிப்பாகவும் வழங்கினார். இதன் தொடர்ச்சியாக தமது அமைச்சினூடாகவும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களினூடாகவும் உரிய உதவிகள் மற்றும் ஒத்தாசைகள் தொடர்ந்து வழங்கப்படும் என உறுதியளித்த அமைச்சரவர்கள் அமைச்சின் செயலாளர் திரு.சிவஞானசோதிக்கும் உரிய பணிப்புரைகளை வழங்கினார்.
வல்லை நெசவாலையானது மீண்டும் தனது உற்பத்திகளை ஆரம்பிக்கும் நிலையில் நெசவினை தமது வாழ்வாதாரமாகக் கொண்ட பல குடும்பங்கள் பயனடைவதுடன் பெருமளவிலானோர் வேலைவாய்ப்பினையும் பெற்றுக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’