ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலே இடம்பெற்று வருகின்றது.
இன்று (26.07.2010) கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் மேற்படி பிரதேசத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இடம்பெற்றது.இக் கூட்டத்தில் விசேடமாக இங்கு ஏற்பட்டிருக்கின்ற அபிவிருத்தி திட்டங்கள் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கின்ற அமைப்புக்கள் மற்றும் மாகாண சபையில் எவ்வாறான அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது. அரசினால் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்கள் அத்தோடு எதிர்வரும் ஆண்டில் வாகரைப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட இருக்கின்ற அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை ஊடாக மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப்பணிகள்
01. பால்சேனை பெரியசாமி கோவில் வீதி 1200மீற்றர் - 16மில்லியன்.
02. குறுக்கு வீதி மாங்கேணி 300 மீற்றர் - 0.5மில்லியன்.
03. பாலமாங்கேணி வீதி 500மீ;றர். - 0.6மில்லியன்
04. புளியங்கண்டலடி சதுக்க மதகு - 1மில்லியன்.
05. வம்மிவட்டவான் உள்வீதி - 1.5மில்லியன்
06. குறுக்கு வீதி - கிரிமிச்சை - 300மீற்றர். - 0.5மில்லியன்.
07. குறுக்கு வீதி - சல்லித்தீவு - 300மீற்றர் - 0.5மில்லியன்
08. விளையாட்டு மைதானம் அமைத்தல் - மாங்கேணி - 2.5மில்லியன்
09. பொதுக்கமிப்பறைகள் அமைத்தல் - 1.1மில்லியன்
10. மன்பள்ளி அமைத்தல் ஓமடியாமடு - 1.5மில்லியன்
11. செயற்றிட்டங்கள் ஒணருங்கிணைப்பு, மற்றும்
கண்காணித்தல்.பி.செஃபி.சபை - 1மில்லியன்
விசேடமாக கிழக்கு மாகாண முதலமைச்சரினால் வாகரைப்பிரதேசத்திற்கென ஒதுக்கப்பட்ட 75 மில்லியன் ரூபா விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாகரைப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற அபிவிருத்திப்பணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அபிவிருத்திப்பணிகள் பின்வருமாறு.
நீர்ப்பாசனம்
கிரிமிச்சை - 8
பாலையடி ஓடை - 2
ஆடு வளர்ப்பு (ஆடு வினியோகம்) - 1.50
கல்வி அபிவிருத்தி - 20.5
சமூக அபிவிருத்தி - 4.11
வீதி அபிவிருத்தி - 23.6
நிர்வாகம் - 1
மின்சாரம் - 10
போக்குவரத்து - 4
இதே போல் பிரதேச செயலகத்தினால் மேற்கெர்ளப்படுகின்ற அபிவிருத்திப்பணிகள். முற்றும் திணைக்களங்களால் மேற்கெர்ளப்படுகின்ற செயற்பாடுகள். அதே போல் அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அத்தோடு விசேடமாக எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டது.
இவ் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்கள் வாகரைப்பிரதேச செயலாளர், தவிசாளர். கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர்கள் விசேடமாக த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’