தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் நாளை புதன்கிழமை நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புத் திருத்தம், தேர்தல் மறுசீரமைப்பு மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து இவ்விரு கட்சிகளும் நாளை பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் தற்போது கொழும்பிற்கு வெளியே இருப்பதால் இப்பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இணையத்தளத்திற்குத் சற்றுமுன் தெரிவித்தார்.
30 ஆம் திகதிக்குப் பின்னர் இப்பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, எதிர்வரும் சனிக்கிழமை இப்பேச்சுவார்த்தை நடைபெறலாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஏனைய மலையகக் கட்சிகளுடன் மேற்படி விடயங்கள் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பேச்சு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’