பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடியாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வைத்தியர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த போது அவருக்கான உரிய சிகிச்சைகள் பதுளை வைத்தியசாலையில் வழங்கப்படவில்லை.உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டிருப்பின் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்று உயிரிழந்த வைத்தியரின் தந்தை, ஜனாதிபதியிடம் தொலைபேசி மூலம் நேற்று முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவதானம் செலுத்திய ஜனாதிபதி, குறித்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணையொன்றை மேற்கொண்டு தன்னிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
பதுளை வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த நதீகா லக்மாலி விஜேநாயக என்ற வைத்தியர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’