கொழும்பு சம்மாங்கோடு ஆடிவேல் பெருவிழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தம்பதியினரின் பங்களிப்புடன் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
புறக்கோட்டை சம்மாங்கோடு கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்திலிருந்து ஆரம்பமான ஆடிவேல் சுவாமி வீதிவலம் காலி வீதி ஊடாக ஜனாதிபதி மாளிகையினை வந்தடைந்தபோது ஜனாதிபதி தம்பதியினர் பூரண கும்பம் வைத்து வரவேற்றதுடன் மலர் தூவி வணங்கி ஆசிகளையும் பெற்றுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து சுவாமி வீதிவலம் பம்பலப்பிட்டி சம்மாங்கோடு மாணிக்கவிநாயகர் தேவஸ்தானத்தை இன்று மாலை வந்தடைந்தது.
160 வருட பாரம்பரியத்தை கொண்ட ஆடிவேல் சுவாமி வீதிவல ஊர்வலமானது கடந்த பதினாறு ஆண்டுகளாக அலரிமாளிகை அமைந்துள்ள காலி வீதி வழியாக பாதுகாப்புக் காரணங்களுக்காக அனுமதிக்கப்படவில்லை. ஆயினும் பயங்கரவாதம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய இவ்வருடத்திலிருந்து மீண்டும் பாரம்பரிய வழக்கத்தின்படி வழமையான வீதி ஊர்வலமாக இடம்பெற்றுள்ளமை விசேட அம்சமாகும். இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் பக்தி பூர்வமாக பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.














1 கருத்துகள்:
http://deebam.blogspot.com/2010/07/blog-post_25.html இந்த இடுகையை பாருங்கள். கொலைக்காரப் பாவிகள் தமது செய்த அட்டூழியத்தை மறைப்பதற்கு கொழும்பில் செய்யும் சுத்து மாத்து. இதற்கு ஒரு சில வெட்கம் கெட்ட வியாபாரிகளும் உடந்தை. வேல் விழா நடப்பது இன்று நேற்றல்ல பல வருடங்களாக.இன அழிப்பு வெறியரின் பங்களிப்புடன் என்று குறிப்பிட்டிருப்பது இருப்பது அந்த முருகனையே அவமானப்படுத்தும் செயல்.யாழ்
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’