வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 7 ஜூலை, 2010

உதைப்பந்தாட்ட ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அக்டோபஸ் (வீடியோ காட்சி )

ஜேர்மன் பெர்லினில் உள்ள மீன்கள் அருங்காட்சியகத்தில் போல் (Paul )என்ற அக்டோபஸ் கால்பந்து போட்டிகளின் முடிவுகளை சரியாக குறிப்பிட்டு அனைவரையும் பிரமிக்க வைத்து வருகிறது.



தொட்டிக்குள் 2 சிறிய பெட்டிகள் அக்டோபஸஷுக்கு பிடித்த உணவுகளுடன் இறக்கப்படுகின்றன. அதோடு பெட்டியில் கால்பந்து போட்டியில் மோதும் அணிகளின் நாட்டுக் கொடியும் வைக்கப்படுகிறது.

அக்டோபஸ் எந்த பெட்டிக்குள் போகிறதோ அந்த அணிதான் வெற்றி பெறுகிறது. கானா அஸ்திரேலியா இங்கிலாந்துடன் மோதிய போது ஜேர்மனிதான் வெற்றி பெறும் என அக்டோபஸ் கூறியது சரியானது. பலமிக்க செர்பியா அணியூடன் ஜேர்மனி தோற்கும் என்றது. அதுவும் சரியாக நடந்தது. இந்த நிலையில் கால் இறுதியில் ஆர்ஜன்டினாவை ஜேர்மனி வீழ்த்தும் என கணித்தது. இதுவும் சரியாக நடந்து விட்டது.

தொடர்ந்து ஜேர்மனியை சரியாக கணித்து வரும் அக்டோபஸ் அரை இறுதியின் போது என்ன சொல்லப் போகிறது என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இந்நிலையில் அரை இறுதியில் ஸ்பெயின் வெற்றி பெரும் என அக்டோபஸ் கணித்துள்ளது .இது ஜேர்மனி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’