வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 4 ஜூலை, 2010

ஷூட்டிங்குக்கு டிமிக்கி – தனுஷ் மீது தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார்..!

மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்புக்கு வராமல் நடிகர் தனுஷ் டிமிக்கி கொடுப்பதாக படத்தின் தயாரிப்பாளர், தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்துள்ளார்.

தனுஷ் நடித்து வரும் படம் மாப்பிள்ளை. இதில் தனுஷுக்கு மாமியாராக மனிஷா கொய்ராலா நடித்து வருகிறார். இப்போது படம் வளருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி உடல் நலம் சரியில்லை என்று கூறி தனுஷ் படப்பிடிப்புக்கு மட்டம் போட்டு வருகிறாராம். இதனால் படப்பிடிப்பு தாமதமாகி வருகிறதாம்.
தற்போது 2-வது மகன் பிறந்திருப்பதால் சுத்தமாக படப்பிடிப்புக்கு வராமல் இருக்கிறாராம் தனுஷ். இதை தயாரிப்பாளர் காதில் போட்டுள்ளார் இயக்குநர். இதனால் டென்ஷனாகிப் போன தயாரிப்பாளர், தயாரிப்பாளர் கவுன்சிலில் புகார் கொடுத்து விட்டார்.
இதையடுத்து விரைவில் தனுஷை வரவழைத்து பஞ்சாயத்துப் பேச திட்டமிட்டுள்ளனராம் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள்.
ஆரம்பத்தில் ஏகப்பட்ட கால்ஷீட் சொதப்பலில் ஈடுபட்டவர் தனுஷ். பின்னர் அது சரியாகி சமர்த்தாக நடித்து வந்தார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீ்ண்டும் தனுஷ் சிக்கலைச் சந்தித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’