மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவின் பரப்பான் கண்டல் கிராமத்தில் தற்பொழுது 260 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1300 பேர்வரை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அப்பகுதியில் உள்ள பரப்பான் கண்டல் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை யுத்தத்தினால் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள பெரியக்குளம், சிறுக்குளம் , பாலைத்தாள்வு,அடைக்கலமோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 200ற்கும் மேற்பபட்ட மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படைந்து இருக்கிறது. தற்பொழுது தற்காலிக பாடசாலை ஒன்று சற்றுத் தொலைவில் அமைக்கப்பட்டு வருகிறது..எனினும் எவ்வித வசதிகளுமற்ற நிலையில் தாம் கல்வி கற்பதாகவும் உடனடியாக தங்களுடைய பாடசாலையினை புனரமைத்துத் தருமாறும் மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’