வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 28 ஜூலை, 2010

யுத்தத்தின் பின்னரான படுகொலைகள் எமது நாட்டில் இல்லை: பூஜித

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் பயங்கரவாதத்தை ஒழித்ததில் நாம் முன்நிற்கிறோம். பல நாடுகளில் யுத்தத்தின் பின்னர் படுகொலைகள் இடம்பெறுகின்றன. ஆனால் எமது நாட்டில் அவ்வாறானதொரு நிலையில்லை என மத்திய பிராந்திய பிரதி பொலீஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார்.



கண்டி கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள அகில இலங்கை யுத்த வீரர்கள் ஞாபகார்த்த அமைப்பு ஒழுங்கு செய்த யுத்த வீரர்களுக்கான மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அவர் இதனைத்தெரிவித்தார்.
மத்திய மாhகணத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில் நேற்று ஆரம்பமான போதே அவர் இதனைத்தெரிவித்தார்.
1983 ம் ஆண்டு முதல் யுத்தம் முடிவடையும் வரை நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்த 20,000 இற்கும் மேற்பட்ட யுத்த வீரர்களுடைய புகைப்படங்கள் நினைவுச் சின்னங்கள் ஆகியன இங்கு வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு இடம் பெரும் இம்மலர் அஞ்சலியின் போது 20,000 யுத்த வீரர்களுக்கும் மலர் அஞ்சலி செலுத்துவதற்காக வௌ;வேறு நாட்கள் ஒதுக்கியிருப்பதுடன் தமிழ் முஸ்லிம் கிரிஸ்தவ யுத்த வீரர்களுக்கும் பிரத்தியேக நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இம்மலர் அஞ்சலியின் போது உரை நிகழ்த்திய மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுன்தர மேலும் தெறிவித்ததாவது எமது நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்கப்பட்டதன் முக்கியத்துவம் மற்றைய நாடுகளை நோக்கும் போது நன்கு விளங்கும். உலகில் பயங்கரவாதம் தலைதூக்கியுள்; ஏனைய நாடுகளில் இன்றும் நாளுக்கு நாள் உயிர்கள் பறிபோகின்றன. ஆனாலும் நாம் அதிலிருந்து தப்பி விட்டோம்;. அதற்குரிய கௌரவம் இந் நாட்டு யுத்த வீரர்களையே சாரும் என்றார்.
மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான இலங்கை இரானுவத்தின் கட்டளையிடும் அதிகாரி செனரத் பன்டார கட்டுகஸ்தோட்டையில் அமைந்துள்ள அகில இலங்கை யுத்த வீரர்கள் ஞாபகார்த்த ஒன்றியத்தின் தலைவர் வன தீகல சுமனஜோதி தேரர் மற்றும் அதன் செயலாளர் எச்.எம்.ஸீ.ஹேரத் உட்பட யுத்த வீரர்களின் உறவினர்கள் பலரும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’