கொச்சியில் கடற்படையினர் இன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, தவறுதலாக குண்டு பாய்ந்து தென்மண்டல கடற்படை தளபதி எஸ்.எஸ்.ஜாம்வால் மரணமடைந்தார்.
கேரள மாநிலம் கொச்சியில் ஐ.என்.எஸ். துரோனாச்சாரியா என்ற பெயரில் தென்மண்டல கடற்படை தளம் இயங்கி வருகிறது. இங்கு, கடற்படையினர் பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம்.
இந்நிலையில், வழக்கம் போல் இன்று காலையிலும் பயிற்சி நடைபெற்றது. அதனை, தென்மண்டல கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ஜாம்வால் தலைமையேற்று நடத்தினார்.
அப்போது, காலை 10.30 மணி அளவில் கடற்படையினர் வெடித்த குண்டு தவறுதலாக எஸ்.எஸ்.ஜாம்வால் மீது பாய்ந்தது. இதில், ஜாம்வால் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம், கடற்படை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தற்செயல் நிகழ்வில் உயிரிழந்த ஜாம்வால், கடற்படையில் மூன்றாவது பெரிய அதிகாரியாவார்.
இந்த சம்பவம் நடந்த விவரத்தின் பின்னணி குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’