கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பாக அமைச்சர் விமல் வீரவன்ச குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் மார்க் டோனர் இதனை தெரிவித்துள்ளதாக ஏ எப் பி செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களின் உரிமையை தாம் மதிக்கின்ற அதேவேளை, ஐக்கிய நாடுகளுக்கு எதிராகவும் அதன் நிபுணர்கள் குழுவுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பில் பான் கீ மூனிற்கு ஆலோசனை வழங்கவே இந்த குழு நியமிக்கப்பட்டது. எனவே அமெரிக்கா அதற்கு பூரண அதரவை வழங்கும் என மார்க் டோனர் சுட்டிக்காட்டியுள்ளார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’