வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 ஜூலை, 2010

தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்ததன் காரணமாக தமிழரசுக் கட்சிக்குள் முறுகல்?

தமிழ் தேசியக் கூட்டமைப்பை இலங்கையின் அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தேர்தல்கள் செயலகத்தில் நேற்று முன்நாள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் தமிழரக் கட்சியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர் சம்பந்தனும் செயலாளர் மாவை சேனாதிராஜாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில்லை என தம்மிடம் உறுதியளித்தாக கூறும் கட்சியின் நிர்வாக செயலாளரும் யாழ்ப்பாண கிளைச்செயலாளருமான குலநாயகம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டால் சம்பந்தனுக்கும் மாவை சேனாதிராஜாவுக்கும் தமிழரசு க்கட்சியில் இடமில்லை என குறிப்பிட்டுள்ளார்
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனிக்கட்சியாக பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் கட்சியின் வேறு எந்த உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்படவில்லை.
இந்த தீர்மானம் கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரின் தனிப்பட்ட தீர்மானம் என்பதே உண்மை. இது தமிழரசு கட்சியின் வேறு எந்த சாதாரண உறுப்பினர்களுக்கும் தெரியாது. அவர்களை தவிர உபதலைவர், செயலாளர், உப செயலாளர்கள் பலர் இருக்கின்றனர். இந்த நிலையி;ல் அவர்கள் இருவரும் தன்னிச்சையாக மேற்கொண்ட இந்த தீர்மானம் ஏற்க முடியாது.
பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் சம்பந்தனிடம் இது தொடர்பில் கேட்ட போதும், அவ்வாறு ஒன்றும் இல்லை என உறுதியளித்தார்.
ஆனால் சம்பந்தன் கூறியுள்ளதை மறுத்துள்ள குலநாயகம் அது சுத்தமான பொய் என குறிப்பிட்டார்.
இதற்கு முன்னர் பி பி சிக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் சுரேஸ் பிரேமசந்திரன் கருத்து தெரிவிக்கும் போது, தனியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டால் தமிழரசுக் கட்சி அழிந்து போகும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு ஆலவிருட்சமான தமிழரசுக் கட்சி அழிந்து போவதை எந்த தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். அதனை நாங்களும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனை எவ்வாறு வளர்ச்சியடைய செய்வது என அனைவரும் உறுதியாக இருக்கும் நிலையில், இந்த தீhமானம் ஏற்றுக் கொள்ளமுடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பை தனிக்கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டிய தேவை இல்லை. ஆனால் ஏனைய இரண்டு கட்சிகளுடன் கூட்டாக செயற்படும் தன்மையுடனேயே தொடரலாம். ஆனால் தனிக்கட்சியாக அது பதியப்படுமானால், அது தனியாக செயல்படும் என்பதே நிலைப்பாடு.
மாவை சேனாதிராஜாவும் சம்பந்தனும், எமக்கு யாருக்கும் தெரியாத வகையில் இரகசியமாக நடக்கின்றனர். அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த உள்ளுராட்சி தேர்தலில் வேறு கட்சியில் சிலர் இணைந்தார்கள் என்பதற்காக அவர்களை கட்சியில் இருந்து விலக வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை எழுதியவர்களே இந்த சட்டத்தை மீறுவது தவறு.
ஆகவே தலைவரும் சரி செயலாளரும் சரி, தமிழரசு கட்சியின் தலைமைத்துவத்தில் இருப்பது தவறு. எனவே அவர்கள் நியாயமானவர்களாக இருந்தால் தாங்களாகவே விலகிக் கொள்ள வேண்டும் என்பதே நிலைப்பாடு. அவர்களின் இடத்தை நிரப்பக்கூடிய பலம் கட்சிக்கு இருக்கிறது. என்றும் குலநாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குலநாயகத்தின் கோரிக்கை தொடர்பாக ஆர் சம்பந்தனிடம் இருந்தோ மாவை சேனாதிராஜாவிடம் இருந்தோ எவ்வித உத்தியோகபூர்வ கருத்துக்களும் இதுவரை வெளியாகவில்லை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’