உக்ரேய்னுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உக்ரேய்னிய - இலங்கை வர்த்தக பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றினார்.
இன்றுகாலை உக்ரேய்னிய வர்த்தக சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உக்ரேய்ன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சின் அறிமுக உரையினைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையினை நிகழ்த்தினார். இலங்கையில் பயங்கரவாதம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு சமாதானம் ஏற்பட்டுள்ள நிலையில் முதலீடு மேற்கொள்ள வருமாறு உக்ரேய்னிய முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி தனது உரையில் அழைப்பு விடுத்தமை விசேட அம்சமாகும்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’