அரச வைத்தியசாலைகளில் கடமைபுரியும் டாக்டர்கள் வெளிநாடு செல்லும் எண்ணிக்கையை வருடத்திற்கு மூன்றாக மட்டுப்படுத்த சுகாதார அமைச்சு ஆலோசித்து வருகிறது.
ஒருநாளைக்கு சுமார் 50 டாக்டர்கள் பல்வேறு காரணங்களுக்காகவும் வெளிநாடு செல்கின்றனர். உயர்கல்வி கற்க, விடுமுறையைக் கழிக்க, தொழில் வாய்ப்புக்காக, உறவினர்களைச் சந்திக்க என்று பல்வேறு காரணங்களுக்காகத் தினம் 50இற்கு மேற்பட்ட டாக்டர்கள் நாட்டிலிருந்து வெளியேறுகின்றனர். இது ஒரு பிரச்சினையாக இருப்பதாக சுகாதார அமைச்சு கருதுகிறது.
இவர்களில் சிலரே நாடு திரும்புகின்ற போதிலும், பலர் நாடு திரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ டாக்டர்களை நாடு இழக்க நேரிடுவதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
இதனால் வைத்தியசாலைகளில் டாக்டர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது. எனவேதான் டாக்டர்கள் வெளிநாடு செல்லும் எண்ணிக்கையை வருடத்திற்கு மூன்றாக மட்டுப்படுத்துவது பற்றி அமைச்சு ஆலோசிப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’