யுத்த சூழ்நிலை காரணமாக நீண்டகாலமாக மூடப்பட்டிருக்கும் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாந்தாமலை மாவடி முன்மாரி சந்தி வீதியை மீண்டும் மக்களின் பாவனைக்காகத் திறந்து விடுமாறு படையினரிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
இன்று 5ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தில் மக்கள் கலந்துகொள்ளும் பொருட்டு இப்பாதையைத் திறக்குமாறும் அவர் கோரினார்.
இப்பாதை மூடப்பட்டுள்ளதால் நீண்டதூரம் சுற்றியே மக்கள் ஆலயத்திற்கு செல்ல வேண்டியுள்ளதாகவும் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’