வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 ஜூலை, 2010

கிளிநொச்சி கனகபுரம் வர்த்தகர்கள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்!


கிளிநொச்சி கனகபுரம் வீதி வர்த்தகர்கள் மற்றும் சந்தை வர்த்தகர்கள் பாராளுமன்ற உறுப்பினர் திரு சந்திரகுமார் அவர்களை நேற்றைய தினம் தமது தேவைகள் தொடர்பில்  சந்தித்துக் கலந்துரையாடினர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

கனகபுரம் வீதி வர்த்தகர்கள் கிரவல் வீதியால் ஏற்படும் தூசு தொடர்பான அசௌகரியங்களை சுட்டிக் காட்டியதோடு இதன் மூலம் நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு ஆளாவதாக முறைப்பாடு தெரிவித்தனர். அத்தோடு தமக்குரிய வீதியின் ஊடாக மின்னிணைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை சந்தை வணிகர்கள் தமக்கு வழங்கப்பட்ட 600 கடைகளில் 200 கடைகள் மட்டுமே இயங்குவதாகவும் உரிய முறையில் கடைகள் மற்றும் சந்தை அமைப்பு உருவாக்கப்படவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக் காட்டினர். பிரதான வீதியிலிருந்து தொலைவில் இச்சந்தை அமைந்துள்ளதால் தமது வியாபாரம் நடைபெறுவதில்லை எனவும் தாம் மேலும் மேலும் கடனாளியாகும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தீர்வைப் பெற்றுத் தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’