தமிழக மீனவர்களை தொடர்ந்து சுட்டுக் கொன்று வரும் இலங்கையின் செயலைக் கண்டித்தும், சென்னையில் உள்ள துணைத் தூதரகத்தை மூ்டக் கோரியும் சென்னையில் இன்று போராட்டம் நடத்திய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ மீனவர்களை தாக்கி வரும் இலங்கைக் கடற்படைக்குக் கண்டனம் தெரிவித்தும், இந்தியாவில் உள்ள தூதரகங்களை மூடக் கோரியும், ஐ.நா. விசாரணைக் குழு இலங்கை அரசு அனுமதிக்கக்கோரியும் இன்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மூடக் கோரும் போராட்டம் நடைபெற்றது.
வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மயிலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவிலிருந்து அவர்கள் ஊர்வலமாக செல்ல முயன்றபோது போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
முன்னதாக இலங்கை தூதரகம் முன்பு அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’