வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 ஜூலை, 2010

எயார்டெல்லின் வழக்கு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி

செல்லிடத் தொலைபேசிகளின் வெளிச்செல்லும் அழைப்புகளுக்கு குறைந்தபட்ச கட்டண நிர்ணயம் செய்தமைக்கு எதிராக பார்த்தி எயார்டெல் நிறுவனமும் மற்றும் ஏனைய இரு பாவனையாளர்களும் தாக்கல் செய்த வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.


பிரதம நீதியரசர் அசோக்க டி சில்வா, நீதிபதிகள் சலீம் மர்சூப், பி.ஏ. ரட்ணாயக்க ஆகியோர் அடங்கிய குழாம் இவ்வழக்கை விசாரித்தது.
தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் புதிய கட்டண நிர்ணயத்தின்படி, நிமிட அடிப்படையிலான வலையமைப்பொன்றுக்குள் ஆகக் குறைந்த கட்டணமாக ஒரு ரூபாவையும் வலையமைப்புக்கு வெளியியே செல்லும் அழைப்புகளுக்கு 2 ரூபாவையும் நிர்ணயித்துள்ளது. விநாடி அடிப்படையிலான அழைப்புகளுக்கு வலையமைப்புக்குள் நிமிடமொன்றுக்கு 1.25 ரூபாவும் வலையமைப்புக்கு வெளியே செல்லும் அழைப்புகளுக்கு 2.50 ரூபாவும் நிர்ணயித்துள்ளது.
எனினும் பழைய இணைப்புகளுக்கு முந்தைய கட்டணங்களைத் தொடர்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த குறைந்தபட்ச கட்டண நிர்ணயம் பாவனையாளர்களின் நலன்களுக்கு எதிரானது எனத் தெரிவித்து பார்த்தி எயார்டெல் நிறுவனம் வழக்குத் தொடுத்திருந்தது. அவ்வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’