மூளை செயலிழந்து உயிரிழந்த தமிழ் இளைஞன் ஒருவனின் சிறுநீரகத்தை இரண்டு சிங்கள நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யும் சத்திர சிகிச்சை கண்டி பொது வைத்தியசாலை வெற்றிகரமான முறையில் இடம்பெற்றது.
சிறுநீரகத்திற்குரிய தமிழ் இளைஞன் விபத்துக்குள்ளாகி கண்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிறுநீரக மாற்றீடு நடவடிக்கை இடம்பெற்றது.
இந்த சிறுநீரக மாற்று நடவடிக்கையை கண்டி பொது வைத்தியசாலையின் சிறுநீரக மாற்று பிரிவு வைத்திய நிபுணர் பி.கே ஹரிசந்திர தலைமையிலான குழுவே மேற்கொண்டிருந்தது.
இந்த சிறுநீரக மாற்றீடு செய்யப்பட இரண்டு நோயாளிகளினதும் உடல் நிலை தேறி வருவதாக டாக்டர் பி.கே ஹரிசந்திர தெரிவித்தார்.
இரண்டு சிறுநீரகங்களையும் வழங்கியவர் கண்டியைச் சேர்ந்த எம்.யோகராஜன் ஆவார். தனது மகன் உயிர் பிழைக்கமாட்டர் என்று கேள்விப்பட்டவுடன் யோகராஜனின் தாய் தனது மகனின் இரண்டு சிறுநீரகங்களையும் நன்கொடை செய்ய உள்ளதாக வைத்தியர்களிடம் அறிவித்தார்.
இத்தாயின் நடத்தை ஏனையோருக்கு ஒரு முன்மாதிரியாகவும் உதாரணமாகவும் திகழ வேண்டும் என டாக்டர் பி.கே ஹரிசந்திர தெரிவித்தார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’