வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 ஜூலை, 2010

யுத்தவீரர்களின் உதவிக்கு தயாராகிறது செயற்கை எலும்பு

படைக்களத்தில் அளவுக்குமீறிய பாரங்களை சுமந்துகொண்டு படைவீரர்கள் நீண்டதூரம் பயணிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறார்கள். இந்த கஷ்டங்களினால் படைவீரர்கள் எளிதில் சோர்ந்துவிடுகிறார்கள். இந்த பலவீனத்தை, எதிரிகள் பலமாகப் பயன்படுத்துவதால் பாரிய இழப்புகள் ஏற்படுகின்றன. இதனை நிவர்த்திசெய்ய எண்ணிய அமெரிக்க இராணுவத்தின் பொறியல் பிரிவு புதியதொரு செயற்கை இயந்திர எலும்புக்கூட்டினை தயாரித்திருக்கிறார்கள். 

இந்த இயந்திரமானது படைவீரர்களின் வெளிப்புறத்தில் பொருத்தப்படும். பொருத்திய பின்னர் அந்த இயந்திரத்தின் உதவியுடன் படைவீரர்கள் சுறுசுறுப்பாக இயங்கமுடியும். 90 கிலோகிராம் பொதியினை சுமந்துகொண்டு மணித்தியாலத்திற்கு 16 கிலோமீற்றர் வேகத்தில் படைவீரர்களால் களைப்பின்றி நடக்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். 
அத்தோடு கையில் பிணைக்கப்பட்டுள்ள உபகரணத்தினால் அதிக பாரமுள்ள பொருட்களையும் எளிதில் தூக்கிவிடக் கூடியதாகவும் இருக்கிறது. ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் படைவீரர்கள் மலையேறுவதில் பெரும் சிரமத்தினை எதிர்நோக்குகிறார்கள். எதிர்காலத்தில் இப்படியான பிரச்சினைகள் நீங்கிவிடும் என கண்டுபிடிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’