அரச வங்கிகளில் நீண்டகாலமாக பல்தொழில் உதவியாளர்களாக பணிபுரிந்து வரும் இளைஞர் யுவதிகள் இன்றையதினம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைச் சந்தித்து தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சர் அவர்களின் பணிமனைக்கு வருகை தந்த மேற்படி இளைஞர் யுவதிகள் நீண்டகாலமாக பல்தொழில் உதவியாளர்களாக தாம் அறுபது பேர் வரை கடமை புரிவதாகவும் தமது குடும்ப பொருளாதார நிலவரங்களையும் தமது எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு தமக்கு நிரந்தர நியமனத்தைப் பெற்றுத் தருமாறும் கேட்டுக்கொண்டனர். இவர்களின் கோரிக்கை குறித்து கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தொடர்புகொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’