குறுகிய காலத்தில் நிறைந்த பயனைத் தரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கறிமுருங்கை மற்றும் யானைக்கொய்யா மரவகைகளின் உற்பத்திகளை யாழ். குடாநாட்டில் பரந்த அளவில் மேற்கொள்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
நேற்றையதினம் அமைச்சரவர்கள் தென்மராட்சியிலுள்ள அல்லாரை உற்பத்திப் பண்ணைக்கு விஜயம் செய்த நிலையில் அங்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நல்லின கறிமுருங்கை மற்றும் யானைக்கொய்யா மர வகைகளைப் பார்வையிட்டார். மேற்படி நல்லின நாற்றுக்கள் பயிரிடப்பட்டு சுமார் ஆறு மாத காலப்பகுதியிலேயே நிறைந்த விளைச்சலை வழங்க வல்லன என்பதுடன் நோயெதிர்ப்பு சக்தியுடன் கூடிய யாழ்ப்பாண சுவாத்தியத்திற்கு ஏற்ற இன தாவரங்கள் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்றையதினம் தனது யாழ். பணிமனைக்கு வருகை தந்த அல்லாரை உற்பத்தி கிராமக் குழுத் தலைவர் திரு. குகநேசனுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்படி இரு இன மரக்கன்றுகளையும் பாரிய அளவில் உற்பத்தி செய்யுமாறும் அவற்றை குடாநாடெங்கும் பரந்த அளவில் பயிரிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். அத்துடன் இதற்குரிய ஆரம்ப மூலதனச் செலவாக ரூபா மூன்று இலட்சத்தைக் மகேஸ்வரி நிதியத்தினூடாக கையளித்த அமைச்சரவர்கள் உடனடியாகவே உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும் கேட்டுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’