வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஜூலை, 2010

காலியில் போரூட் நிறுவனத்தின் பெயரில் மோசடி

தென்மாகாணத்தில் நடைபெற உள்ள ஒரு அபிவிருத்தித் திட்டத்துக்காக தமது நிறுவனம் இளைஞர்களைச் சேர்ப்பதாகக் கூறி அத்திட்டத்தின் தலைமை அதிகாரி என்ற போர்வையில் ஒருவர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக போரூட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காலியில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் தருவதாகக் கூறியும், ஏதோ சாக்குப் போக்குகளும் கூறி குறித்த இளைஞர்களிடம் இருந்து கட்டணம் அறவிட்டு வரப்படுவதாக தமது நிறுவனம் அறிந்துள்ளதாக அந்நிறுவனம் விடுத்துள்ள ஊடக அறிக்கை கூறியுள்ளது.
இதுமாதிரியாக இளைஞர்களை வேலைக்குச் சேர்ப்பதற்கு தமது நிறுவனம் எந்தவொரு அதிகாரியை நியமிக்கவில்லை என்றும், இவ்வாறான மோசடிகளால் பாதிக்கப்படுபவர்களுக்குத் தாம் பொறுப்பாளிகள் அல்ல என்றும் அந்த ஊடக அறிக்கை தொடர்ந்து கூறியுள்ளது. மேலும், வீடுகள், கோயில்கள், நூலகங்கள் மற்றும் கழிவறைகள் கட்டப்படும் திட்டம் ஒன்றுக்கே ஆட்கள் சேர்க்கப்படுவதாக மோசடி செய்யும் நபர் தெரிவித்து வருவதாகவும் போரூட் தெரிவித்தது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’