வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 19 ஜூலை, 2010

வம்பு பண்ணாத சிம்பு..! - எஸ்.எஸ்.குமரன்

சென்னை துறைமுகத்தில் பணியாற்றும் மத்திய அரசின் ஊழியர், இசை அவதரம் எடுத்து இருக்கிறார். சமீபத்தில் ரிலீஸாகி ஓடிக்கொண்டு இருக்கும் 'களவாணி' 'விருந்தாளி' படங்களின் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனிடம் பேசினோம்.
'களவாணி' பட அனுபவம் பற்றி...
'பூ' படம் வெளியாகும் போது என்ன படபடப்பு இருந்ததோ கிட்டத்தட்ட அதே படபடப்பு களவாணி ரிலீஸின்போதும் இருந்தது. ஏனென்றால் களவாணி என்னுடைய இரண்டாவது படம். படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனது இசைக்கு பாராட்டுகள் வருவது சந்தோஷமாக இருக்கிறது.
களவாணியில் பாடல்கள் அதிகமாக இல்லை என்பது உண்மைதான். அதில் இடம்பெற்றிருக்கும் 'ஒரே முழுப்பாடல் டம்ம டும்மா மட்டும் தான். மற்ற பாட்டுக்கள் துண்டு துண்டானவை. அந்த பாடலகள் துருத்திக் கொண்டு நிற்காமல் கதையோடு இழைந்திருக்கிறது படம் பார்த்தவர்கள் பாராட்டும்போது நெகிழ்ந்து போகிறேன்.  'துபாய்க்கு போகப்போறனே...' என்ற பிரமாதமான பாடல் படத்தில் இடம் பெறாமல் போனதில் எனக்கு வருத்தம்தான்.
'பூ' படத்துக்கு ஏன் நீண்ட இடைவெளி?
அந்த படத்துக்கு பிறகு படவாய்ப்புகள் குவிந்தன. எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ளவில்லை. மனசுக்கு பிடித்தமான கதைகளை செலக்ட் செய்கிறேன். இசையில் எனக்கு சுதந்திரம் தருகிற இயக்குனர்களையும் தயாரிப்பாளரை வரவேற்கிறேன்.
'களவாணி' 'விருந்தாளி'யை தொடர்ந்து 'நெல்லு', 'கலிங்கத்துப்பரணி', 'சிகப்பு கம்பளம்,' 'சின்னகடைத்தெரு பழனி' படங்களுக்கு இசையமைத்து வருகிறேன்.
பாட்டுக்கான குரலை எப்படி தேர்வு செய்கிறீர்கள்..?
ஒரு மெட்டு உருவாகும் போதே அந்த பாட்டுக்குரிய பாடகர்களை மனக்குள்ளேயே உறுதி  செய்து விடுவேன். 'பூ' படத்தில் இடம்பெற்ற 'சிவகாசி ரதியே...' பாட்டை ட்யூன் போட்டபோது அந்தபாடலை பெரியகருப்புத் தேவரை பாடவைக்க முடிவு செய்தேன். இதை நான் வெளியில் சொன்னப்போது 'அவர் வேண்டவே வேண்டாம்...' என்று மறுத்தார்கள்.  எதற்கும் செவிமடுக்காமல் அவரையே பாட வைத்தேன். அந்தப்பாட்டு பெரிதாக பேசப்பட்டது.
'களவாணி'யில் 'பேஞ்சமழை காய்ஞ்ச நேரம்...' பாடலை தேந்திரனையும், 'ஊரடங்கும் சாமத்திலே...' பாட்டை செந்திவேலனையும், பாடவைத்தேன்.
அடுத்து வரப்போகும் 'சின்னக்கடைத்தெரு பழனி' படத்தில் உள்ள ஒரு மெலடி பாடலை சோனாமோகபத்ரா பாடினால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஒரு விளம்பரத்தில் சோனாவின் குரலக் கேட்டு சொக்கிப் போனேன். ஒருவழியாக கண்டுபிடித்து மும்பைக்கு சென்று அவரையே பாடவைத்தேன். ஒரு மாலைப்பொழுது... என்று தொடங்கும் அந்த மெலடி பாடலை சீக்கிரம் எல்லா உதடுகளும் நிச்சயம் முணுமுணுக்கும்.
பாடகர்கள் என்று இல்லை திறமையுள்ள புதிய பாடலாசிரியர்களுக்கும் வாய்ப்பு கொடுத்து வருகிறேன். முருகன் மந்திரம் என்ற பத்திரிகையாளரை 'விருந்தாளி' படத்தில்  இடம்பெற்ற நான்கு பாடல்களையும் எழுதவைத்தேன்.
சமீபத்தில் சந்தித்த சந்தோஷ ஷாக்..?
'விருந்தாளி'யில் 'கடிதமே... கடிதமே...' என்று நான் பாடிய டைட்டில் பாடலைக் கேட்டு எனது இசையிலும் சரி.. குரலிலும் சரி... ராஜாவின் சாயலில் இருக்கிற என்று நிறைய பேர் என்னிடம் சொன்னார்கள். அதுதான் எனக்கு கிடைத்த கிரேட்  கிஃப்ட்.
அதே படத்திலுள்ள 'எப்போது உன் ஜன்னல்' என்று தொடங்கும் பாடலை ஹரிஹரனை பாடவைக்க மும்பை போனேன். அந்த சமயத்தில்தான் ஹரிஹரனுக்கு தேசிய விருது அறிவித்திருந்தார்கள். ரெக்கார்டிங் தியேட்டருக்கு அவர் பாட வந்த நேரம்... சிவசேனா தலைவர் பால் தாக்கரே, ஹரிஹரனை போன் பண்ணி அழைத்தார். கிளம்புவதற்கு முன் 'ஒரே ஒரு தடவை டியூனை போடுங்க...' என்றார். ரசித்து... லயித்து கேட்டவர் 'பாடி முடிச்சுட்டு பால்தாக்கரேயை பார்த்துக் கொள்கிறேன்...' என்று பாடிக் கொடுத்தார்.
அதுபோல 'நெல்லு' படத்தில் இடம் பெற்ற 'திருடா... திருடா...' என்கிற குத்துப்பாட்டை முதன்முதலாக கவிஞர் தாமரை எழுதியிருந்தார். அந்த பாட்டை சிம்பு பாடினா நல்லாயிருக்கும் என்று தோன்றியது. சிம்பு பிஸியான நடிகராச்சே.. சொல்றபடி கேட்பாரா... என்று தயக்கமா இருந்தது. எனக்குள், இருந்த அந்த நினைப்பை பொய்யாக்கி எந்த பந்தாவும் இல்லாமல் சூப்பராக பாடிக்கொடுத்தார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’