வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 23 ஜூலை, 2010

புலிகளின் தலைவர் இறந்து விட்டார் நேரில் பார்த்து உறுதிப்படுத்தினேன் - முன்னாள் கூட்டுப் படைத் தளபதி பரபரப்புப் பேட்டி

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதை பிரபாகரனின் பிரத்தியோகத் துப் பாக்கியைப் பரிசோதித்து உறுதிப்படுத்தினேன்.இப்படி இஸ்ரேலிய நாட்டு ஆங் கிலப் பத்திரிகைக்குப் பரபரப்புப் பேட்டி ஒன்றை வழங்கியிருக்கின்றார் கடந்த வருடம் அரசு-புலிகள் ஆகியோருக்கிடையிலான இறுதி யுத்தம் இடம்பெற்றபோது களத்தில் கூட்டுப் படைகளின் கட்டளைத் தளபதியாகச் செயற்பட்டவரும் இஸ் ரேலுக்கான இலங்கையின் இந் நாள் தூதுவருமான எயார் சீவ் மார் ல் டொனால்ட் பேரொ.

அவர் அப் பேட்டியில் முக்கியமாக மேலும் தெரிவித்துள்ளவை, நான் பிரபாகரனின் உயிரற்ற சடலம் சுமந்து செல்லப்படுகின்றமையைக் கண்டு கொண்டேன். அச் சடலம் காட்டு வழியாகக் கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்தது. என்னால் அமைதியாக இருக்க முடிய வில்லை. அச் சடலத்திற்குப் பின்னால் ஓடினேன். அது பிரபாகரனின் சடலம்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முயன்றேன்.
பிரபாகரனின் சொந்தத் துப்பாக்கியைத் தொட்டுப் பார்த்துப் பரிசோதித்தேன். அவரது துப்பாக்கி ரகம் அத் துப்பாக்கியின் சீரியல் இலக்கம் ஆகியன எனக்கு முன்கூட்டியே நன்றாகத் தெரியும். அவருடைய தகட்டு இலக்கம் 001. அது பிரபாகரன் உடையதுதான்.
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதை உணர்ந்து கொண்டேன்.வீட்டுக்கு வந்தேன். எனது இராணுவச் சீருடைகளைக் களைந்தேன். நான் இப்போது ஓய்வு பெற்றுக் கொள்ளலாம் என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். அதன் பின் ஓய்வு பெற்றுக் கொண்டேன். இப்போது நான் இஸ்ரேலுக்கான தூதுவர் என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’