வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 22 ஜூலை, 2010

அரச சேவை என்பதற்கு அப்பால் சமூகத்திற்குரிய பணியாக கருதி சேவையாற்ற வேண்டும். வலி. வடக்கு ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்.

வலிகாமம் வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் கூட்டம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் இன்றையதினம் இடம்பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
தெல்லிப்பளையிலுள்ள பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் முரளிதரனின் ஒருங்கிணைப்புடன் ஆரம்பமான இவ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசாங்க திணைக்களங்கள் சபைகள் மற்றும் அதிகாரசபைகள் ஆகியவற்றின் பிரதேச பொறுப்பதிகாரிகளும் வலி வடக்கு பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் அமைப்புக்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு துறையாக எடுத்து ஆராயப்பட்டு துறைசார் வேலைத்திட்டங்கள் அவற்றை அமுல்படுத்துதல் மற்றும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அபிப்பிராயங்கள் பெறப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இதில் மீள்குடியேற்றம் கல்வி விவசாயம் கால்நடை கடற்றொழில் சுகாதாரம் மின்சார வசதி பிரதேச சபையின் செயற்பாடுகள் சமுர்த்தி நடவடிக்கைகள் உலக வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் மீளெழுச்சித் திட்டங்கள் பல நோக்கு கூட்டுறவுச் சங்க செயற்பாடுகள் போக்குவரத்து வீதி அபிவிருத்தி தபால் ஆகிய துறைசார் செயற்பாட்டுத்திட்டங்கள் விரிவாக ஆராயப்பட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சரும் வலிகாமம் வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உரையாற்றுகையில் அரசாங்க ஊழியர்கள் அரச சேவை என்பதற்கு அப்பால் சமூகத்திற்குரிய பணியாகக் கருதி சேவையாற்ற வேண்டும் எனக்கேட்டுக் கொண்டதுடன் எதிர்வரும் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு முன்பதாக அவரவர் துறை சார்ந்த அறிக்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை தனக்கு சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதன் நிமித்தம் பிரதேசத்தின் களப்பணிகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் நேரடியாக விஜயம் மேற்கொண்டு தம்மால் கண்டறிய முடியும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு தெரிவித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.








0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’