வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 22 ஜூலை, 2010

மத்திய கிழக்கில் இலங்கைப் பணிப்பெண்கள் இருவர் மரணம்

ஜோர்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் இரண்டு இலங்கைப் பணிப்பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜோர்தானில் பணிபுரிந்துவந்த அனுராதபுரம் ஹொரவப்பொத்தானைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண்ணொருவர் தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டிலுள்ள இலங்கைத் தூதரகம் மேற்கொண்ட விசாரணைகளில் இது ஒரு தற்கொலை மரணமென உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பணியகத்தின் பொது முகாமையாளர் எல் கே ருஹுனுகே தெரிவித்தார்.
இதேவேளை லெபனானில் பணிபுரிந்துவந்த மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண்ணொருவர் வயது குறைந்த ஒருவர் செலுத்திய வாகனம் விபத்தில் சிக்கியபோது உயிரிழந்துள்ளார்.
இந்த இரு இலங்கைப் பெண்களினது பிரேதங்களை இலங்கைக்குக் கொண்டுவர வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பொது முகாமையாளர் கூறினார்.
இவர்களுக்கான இழப்பீடுகளையும் நிலுவைச் சம்பளத்தையும் பெற்றுக்கொடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’