வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 ஜூலை, 2010

70 இறந்த குழந்தைகளின் உடல்களுடன் ஒருவர் கைது

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. இங்கு சிகிச்சை பெறுகின்றவர்கள் இறந்துவிட்டால், அவர்களின் உடல்களை பொறுப்பேற்க வருபவர்கள் அரிதாம்.



ஆகையினால் உடல்களை பொறுப்பெடுத்து அடக்கம் செய்வதற்கென சிலருக்கு பொறுப்புக் கொடுத்திருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். இவர்கள் அந்த சடலங்களைப் பொறுப்பெடுத்து நல்லடக்கம் செய்வார்கள். இப்படி பொறுப்பெடுக்கின்ற நபரொருவர் 70 குழந்தைகளின் உடல்களை பைகளில் கட்டி மறைந்து வைத்திருந்தது இப்பொழுது தெரிய வந்திருக்கிறது.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின்படி அந்நபர் கைதுசெய்யப்பட்டார். எதற்காக அந்த குழந்தைகளின் உடல்களை பதுக்கிவைத்தார் என்பது பற்றி அந்நபர் வாய் திறக்கவில்லையாம். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’