இவ்வருடம் முதல் 4 மாதகாலப் பகுதியில் 430 சிறார்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் திணைக்களத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு அறிக்கையொன்றில் தெரிவி;க்கப்பட்டுள்ளது.
இவர்களில் 270 பேர் சிறுமிகள் எனவும் 150 பேர் சிறுவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் 225 பேர் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
வீட்டைவிட்டு ஓடிப்போவது மற்றும் கடத்தல்கள் ஆகியன இக்காணாமல்போதல் விவகாரத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன.
இவர்களில் பெரும்பாலானோர் 12-18 வயதுக்கிடைப்பட்டவர்களாவர். சுமார் 117 பேர் 16 வயதானவர்களாவர்.
அநுராதபுரம் பகுதியிலிருந்தே பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளனர். அப்பகுதியில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை 50 பேர் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட சிறார்களில் பலர் விபசாரத்திற்கு அல்லது தத்தெடுத்து வளர்க்கப்படுவதற்காக விற்பனைசெய்யும் நோக்குடன் கடத்தப்பட்டுள்ளனர்.
சிறுமிகளுக்கு திருமண ஆசைகாட்டி வீட்டை விட்டு ஓடிவரச் செய்துவிட்டு பின்னர் அவர்களை விபசார விடுதிகளுக்கு விற்பனை செய்யும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’