வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 26 ஜூலை, 2010

ஜேர்மன் இசைநிகழ்ச்சி நெரிசலில் சிக்கி 19 ரசிகர்கள் பலி

ஜேர்மனியில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியொன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 ரசிகர்கள் உயிரிழந்ததாகவும் 342 பேர் காயமடைந்ததாகவும் ஜேர்மன் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
டுய்ஸ்பர்க் நகரில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த 'லவ் பரட்' இசை நிகழ்ச்சியொன்றில் சுமார் 14 இலட்சம் பேர் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
நேற்று சனிக்கிழமை பெரும் எண்ணிக்கையானோர் சுரங்கப்பாதையொன்றுக்கூடாக செல்ல முயன்றபோது நெரிசல் ஏற்பட்டு இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அச்சுரங்கபாதைக்கூடாக இசைநிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு  ஒரேயொரு வாசலே இருந்தது. ஏற்கெனவே அங்கு கூட்டம் அதிகமாகிவிட்டபடியால் அந்த வாயிலை அடைத்த பொலிஸார்இ மறுபுறமாக வருமாறு ரசிகர்களுக்கு அறிவித்தல் விடுத்ததையடுத்து பலர் முண்டியடித்துக்கொண்டு விரைந்து செல்லமுற்பட்டனர் எனவும் இதன்போது 19 பேர் உயிரிந்ததாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல் உத்தரவிட்டுள்ளார். அதேவேளைஇ இனிமேல் லவ் பரட்  இசை நிகழ்ச்சி நடைபெற மாட்டாது என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’