ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கெதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைக்கும் தன்னை இராணுவக் காவலில் வைத்திருப்பதற்கும் எதிராக தொடுத்த வழக்கு விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒக்டோபர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
நீதிபதிகள் சத்யா ஹெட்டிகே (தலைவர்), டபிள்யூ. எல். ரஞ்சித் சில்வா, அனில் குணரட்ன ஆகியோர் முன்னிலையில் இவ்விடயம் நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பொன்சேகாவின் சட்டத்தரணிகள் எதிர் மனுவொன்றை நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.
இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் ஜயசூரிய, மேஜர் ஜெனரல் எச்.எல். வீரதுங்க, மேஜர் ஜெனரல் ஏ.எல்.ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி.ஆர்.ஏ.பி. ஜயதிலக்க, ரியர் அட்மிரல் டபிள்யூ.ஜே.எஸ். பெர்னாண்டோ (பிரதி சொலிசிட்டர் ஜெனரல்) மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் அம்மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
2ஆம், 3 ஆம், 4 ஆம் பிரதிவாதிகள் குறித்த இராணுவ நீதிமன்றத்தை தொடர்ந்து நடத்துவதற்கு தடை விதிக்குமாறும் 5 ஆம் பிரதிவாதி அந்நீதிமன்றத்தின் வழக்குரைஞராக பணியாற்றுவதற்கும் தடை விதிக்குமாறு அம்மனுவில் கோரப்பட்டிருந்தது.
அத்துடன் தன்னை இராணுவக் காவலில் வைத்திருப்பதற்குத் தடை விதிக்குமாறும் சரத் பொன்சேகா கோரியிருந்தார்.
இம்மனு தொடர்பான விசாரணை ஒக்டோபர் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’