உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு உக்ரேன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு இன்று மாலை அந்நாட்டு ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் மகத்தான வரவேற்பளித்துள்ளார்.
|
உக்லேன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு செங்கம்பள வரவேற்புடன் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இலங்கை உக்ரேனிய தலைவர்களினதும் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றதை அடுத்து இரு நாடுகளும் பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன. இதில் சுற்றுலாத்துறை கப்பல்துறை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஆகியன தொடர்பான உடன்படிக்கைகள் இரு நாட்டுத் தலைவர்கள் முன்னிலையிலும் கைச்சாத்திடப்பட்டமை முக்கிய விடயமாகும். இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஜனாதிபதி செயலக தலைமையதிகாரி காமினி செனரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி உக்ரேன் இலங்கை வர்த்தக சமூக சங்கத்தை ஆரம்பித்து வைத்து அங்கு உரை நிகழ்த்தவுள்ளதாக உக்ரேன் செய்திகள் தெரிவிக்கின்றன
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’