இலங்கை தமிழ் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்டுக்கு சர்வதேச மன்னிப்புச் சபை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அக்கடிதத்தில், இலங்கையின் நிலமைகளில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அங்கு இன்னும் உயிரச்சம் நிலவுவதாகவும், படுகொலைகள், சித்திரவதைகள்,காணாமல் போதல்கள் என்பன இப்போது கூட தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டே இருப்பதாலும் இலங்கையிலிருந்து அகதிகளாக வரும் மக்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கும் முன்னெடுப்புக்கள் சுமார் மூன்று மாத காலமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் எதிர்வரும் 8 ஆம் திகதியுடன் இந்த இடைநிறுத்தம் முடிவடைகின்றது. அதற்குப் பின்னரேனும் ஈழ அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்க புதிய பிரதரான நீங்களும், உங்கள் அரசும் நடவடிக்கை எடுங்கள்". என குறிப்பிடப்பட்டுள்து.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’