வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 30 ஜூன், 2010

தென்னிந்தியரின் எதிர்ப்புப் போராட்டம் குறித்துக் கவலையில்லை: சல்மான் கான்

'ரெடி' திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதற்கு எதிராக தென்னிந்திய திரைப்படத் துறையினர் எடுக்கும் போராட்ட நடவடிக்கைகள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை என உலகப் புகழ் பெற்ற வட இந்திய ஹிந்தி சினிமா நட்சத்திரம் சல்மான் கான் தெரிவித்தார்.
சல்மான்கான் மற்றும் தென்னிந்திய நடிகை அசின் ஆகியோரடங்கிய குழு, 'ரெடி' திரைப்படத்துக்கான படப்பிடிப்பை இலங்கையில் ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது.
ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவாறு தெரிவித்தார்.
இதில் கலந்து கொண்ட நடிகர் சல்மான் கானிடம் ஊடகவியலாளர் ஒருவர்,
" தென்னிந்தியாவில் முன்னெடுக்கப்படும் எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில்,
"நான் ஒரு நடிகன், அரசியல்வாதியல்ல. 'ரெடி' திரைப்படத்துக்கான படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறுவதற்கு எதிராக தென்னிந்திய திரைப்படத் துறையினர் எடுக்கும் போராட்ட நடவடிக்கைகள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை.
இந்த விடயம் தொடர்பில் நான் இதுவரை எதுவித பிரச்சினையையும் எதிர்நோக்கவில்லை. குறித்த திரைப்படத்தினை தென்னிந்தியாவில் திரையிடுவதிலும் எந்தப் பிரச்சினையும் ஏற்பட மாட்டாது. படத்தின் ஒருசில காட்சிகள் மொரிஷியஸ் தீவுகளில் நடத்தப்பட்டாலும், அநேகமான காட்சிகள் இலங்கையிலேயே எடுக்கப்படவுள்ளன" எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’