பிடதி ஆசிரமத்தில் அக்னி வளையத்துக்குள் நித்யானந்தா தியானத்தை தொடங்கினார். தினமும் அவர் இது போன்று தியானம் செய்ய முடிவு செய்துள்ளார்.
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச படம் தொலைக்காட்சிகளில் வெளியானது. இதை தொடர்ந்து நித்யானந்தா கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு பெங்களூரை அடுத்துள்ள ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கர்நாடக ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்க உத்தரவிட்டது. 53 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நித்யானந்தா நேற்று முன்தினம் மாலையில் ஜெயிலில் இருந்து விடுதலையானார்.
நித்யானந்தா, நேராக தனது ஆசிரமத்துக்கு சென்றார். அவரை ஆசிரம நிர்வாகிகள் மற்றும் சீடர்கள், பக்தர்கள் வரவேற்று ஆசிரமத்துக்குள் அழைத்துச்சென்றனர், அங்கு ஆனந்தேஸ்வர சன்னிதியில் நித்யானந்தா பூஜை செய்தார்.
இந்த நிலையில் நித்யானந்தா `அக்னி வளைய`த்துக்குள் அமர்ந்து தியானம் செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று அதிகாலை இந்த தியான பூஜை தொடங்கியது. அதிகாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை சுற்றிலும் நெருப்பு வளர்த்து அதன் நடுவில் அமர்ந்தபடி தியானத்தில் ஈடுபட்டார். இந்த தியானத்தில் அவரது சீடர்களும், பக்தர்களும் கலந்து கொண்டனர்.
`பஞ்ச தபஸ்` என்று அழைக்கப்படும் இந்த தியானம், எதிர்மறை சக்திகளை அகற்றவும், உலக நன்மைக்காகவும் நடத்தப்படுவதாக ஆசிரம நிர்வாகி தெரிவித்தார். இதேபோல தினமும் காலையில் அக்னி வளையத்துக்குள் தியானம் செய்ய நித்யானந்தா முடிவு செய்துள்ளார்.
இதற்கிடையே நித்யானந்தாவை ஸ்ரீராமசேனையின் தலைவர் பிரமோத் முத்தாலிக் நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர் பிரமோத் முத்தாலிக் நிருபர்களிடம் கூறுகையில், "நித்யானந்தாவுக்கு எதிராக சதி நடந்து உள்ளது. அவரை கைது செய்தது தவறு`` என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’