ஒன்றுக்கு இரண்டு முறை இயந்திரத்தில் பட்டைதீட்டப்பட்ட வெள்ளை அரிசிச்சாதம் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் உருவாகும் ஆபத்து அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அரிசிச்சாப்பாட்டுக்கும் நீரிழிவு நோய்க்குமான நேரடி தொடர்பு குறித்து ஆராய்ச்சி செய்த ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், இது தொடர்பில் சுமார் இரண்டு லட்சம்பேரிடம் கேள்விகள் கேட்டு அவர்களின் பதில்களைப் பெற்று அதன் அடிப்படையில் சில முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, வெள்ளை வெளேர் என்று இருக்க வேண்டும் என்பதற்காக ஒன்றுக்கு இரண்டுமுறை இயந்திர அரவைக்குட்படுத்தப்பட்ட அரிசியை சாப்பிடுவதால், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகரிப்பதாக தெரிவித்திருக்கிறார் கள்.
மாற்று
அப்படிப்பட்ட அரிசிக்கு பதிலாக, கைக்குத்தல் அரிசி அல்லது இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவலாக பயன் பாட்டில் இருக்கும் மேல்தோல் மட்டும் நீக்கப்பட்ட சிகப்பரிசியை சாப்பிட்டால் நீரிழிவு நோய் தோன்றும் வாய்ப்பு மூன்று மடங்கு குறைவதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
மேலும் அன்றாட உணவில் அரிசியின் பங்கு அளவுக்கு அதிகமாக இருப்பதற்கு மாறாக, மற்ற முழுமையான தானிய உணவு வகைகளை கணிசமாக அதிகரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’