வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 29 ஜூன், 2010

இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகளை கனடா அனுமதிக்காது: மன்மோகன் சிங்

இந்தியாவுக்கு எதிரான சக்திகளை கனடா ஒருபோதும் அனுமதிக்காது என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார். ஜி-20 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க டொரன்டோ சென்றுள்ள மன்மோகன் சிங் கனடா பிரதமர் ஸ்டீபனைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

இரு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்ததாவது:-
"சீக்கிய சமுதாயத்தில் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாத சக்திகள் கனடாவிலிருந்து செயல்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அத்தகைய சக்திகளை கனடா அரசு ஒருபோதும் ஊக்குவிக்காது. கனடாவில் உள்ள சீக்கியர்கள் மிகவும் வளமாக வாழ்கின்றனர். கனடாவின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப அவர்களது வாழ்க்கை முறை மாறிவிட்டது.
இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலோர் அமைதியை விரும்புபவர்கள். கனடாவின் மிகச் சிறந்த குடிமக்களாக வாழ்கின்றனர். இவர்களில் ஒரு சிறு தொகையினர் பிரிவினை சக்தியாக உருவெடுத்துள்ளனர். இது சீக்கிய சமுதாயத்துக்கு உடன்பாடானதல்ல. இந்தியாவுக்கெதிரான இத்தகைய சக்திகளின் செயல்பாடு ஒருபோதும் எடுபடாது. ஏனெனில் இந்தியாவுடன் கனடாவுக்கு மிக நெருங்கிய நட்புறவு உள்ளது." இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’