வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 29 ஜூன், 2010

இலங்கை-இந்திய உறவுக்குப் பாலமாக சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகம்

இந்தியா, இலங்கை இரு நாடுகளுக்குமான கலாசாரம் மற்றும் கல்விப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில், சர்வதேச பௌத்த பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது
.மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், நேற்று இலங்கைக்கு அரசு பயணம் ஒன்றை மேற்கொண்டார். அப்போது, இலங்கை அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசினார்.
அதையடுத்து அவர் அளித்த பேட்டியில்,

"இலங்கை அதிபரையும், பிற தலைவர்களையும் சந்தித்த பின், மத்தியபிரதேச மாநில தலைநகர் போபால் அருகிலுள்ள சாஞ்சியில், 65 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச புத்த பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இப்பல்கலைக்கழகம், கூட்டு முயற்சியில் அமையும். இதற்காக மாநில அரசு ஐந்து கோடி ரூபா ஒதுக்கும். இந்திய - இலங்கை உறவு உறுதியானது.
மாநில அரசு, இலங்கையுடனான வர்த்தகத் தொடர்பை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும்.பல்கலைக்கழகம் எப்படி அமைய வேண்டும் என்று முடிவு செய்வதற்கான கமிட்டி ஒன்றை அமைப்பதற்கு ராஜபக்ஷ சம்மதித்துள்ளார்.
இப்பல்கலைக் கழகத்தோடு இணைந்து செயல்பட பௌத்த நாடுகளான ஜப்பான், கொரியா உள்ளிட்டவை விருப்பம் தெரிவித்துள்ளன" என்று தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’