சர்வதேச நாணய நிதியத்தினால் தாமதிக்கப்பட்டு வந்த இலங்கைக்கான மூன்றாம் கட்ட கடன் உதவியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருகின்றது. எனினும், இலங்கைக்கான மூன்றாம் கட்ட கடன் உதவி சர்வதேச நாணய நிதியத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றகரமான நிலை காணப்படுவதால், இலங்கைக்கு கடன் உதவியளிப்பதற்கு இணங்கியிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டது.
இந்நிலையில், மூன்றாம் கட்ட கடன் உதவியாக இலங்கைக்கு 407.8 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்படவிருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’